ரமழான் பண்டிகையை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான விசேட வர்த்தக வரி எதிர்வரும் சில தினங்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கு சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.