தென் மாகாணத்தில் இன்று (01) துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் கல்விக்காக சிறந்த சேவையை ஆற்றிய முன்னாள் அமைச்சர் ரொனி டி மாலினுக்கு அஞ்சலி செலுத்தும விதமாக துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தின் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு தென் மாகாண ஆளுநர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சரின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் ருகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.
சடலம் தற்போது ரு{ஹணு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.