யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சுமார் 34 வருடங்களின் பின்னர் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயங்களுக்கு சென்று, பிரதி வெள்ளிக் கிழமைகளில் வழிபட இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி சில ஆலயங்களுக்கு இராணுவத்தினர் அழைத்து சென்று இருந்த நிலையில் , நேற்றைய தினம் கட்டுவான் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றுக்கு அழைத்து சென்று இருந்தனர்.
அதன் பொது ஆலயத்திற்கு 30 பேர் வரையில் சென்று இருந்தனர். அவர்களை இராணுவத்தினர் தமது பேருந்துக்களில் அழைத்து சென்று , ஆலய சூழலில் வழிபாடுகள் நடாத்தி வழிபட அனுமதித்து , பின்னர் மீண்டும் ஆலயத்தில் இருந்து மக்களை தமது வாகனத்தில் அழைத்து வந்து உயர்பாதுகாப்பு வலய எல்லை பகுதியில் இறக்கி விட்டனர்.
இதற்கமைய , கடந்த 1990ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று , இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதிகளில் இருந்து தாம் வெளியேறிய பின்னர் , 34 வருட காலமாக எமது சொந்த இடங்களுக்கு மீள திரும்ப முடியாதவாறு , எமது பகுத்து உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
34 வருடங்களின் பின்னர் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி வழங்கி , எம்மை அழைத்து சென்று ஆலயத்தில் வழிபட விட்டு ,, மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.
மிக விரைவில் எம்மை நிரந்தரமாக சொந்த இடங்களில் மீள குடியமர அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.