மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கலபெத்த அலபொத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண், கடந்த 28 ஆம் திகதி சிற்றுண்டிச்சாலையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார், பின்னர் பாடசாலை ஆசிரியர் ஒருவர் வந்து சிற்றுண்டிச்சாலையில் விளக்குகள் அணைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் மாலை 3.40 மணியளவில் பாடசாலைக்கு சென்று மின்விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லத் தயாரானபோது, மின்விளக்குகளை அணைத்துவிட்டு, கதவை மூடிவிட்டு, அலுவலகத்துக்கு வருமாறு அதிபர் கூறியுள்ளார். அங்கு சென்ற பெண்ணை 53 வயது நிரம்பிய அதிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தொம்பகஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.