சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இறுதி கிரியைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேவை இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்ற பின்னர் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் நாட்டுக்கு திரும்புவார் என அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக எதிர்ப்பார்த்திருந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.