நிலவும் அதிக வறட்சியுடனான வானிலையினால் நாளாந்த நீர் பயன்பாட்டின் அளவு உயர்வடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அனைத்து நீர்வழங்கல் கட்டமைப்புகளும் அதிகபட்ச செயற்றிறனுடன் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி தெரிவித்துள்ளார்.
நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளமையினால் நாளாந்தம் 2000-இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகம் தொடர்பான சிக்கல்கள் குறித்து 1939 எனும் துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அம்பத்தலை மற்றும் பியகம நீர் விநியோக மத்திய நிலையங்களில், சேற்றுநீர் உட்புகுவதைத் தடுப்பதற்காக நிர்மாணிக்கப்படும் தற்காலிக தடுப்புச்சுவரின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.