யாழ். பூநகரியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பூநகரி வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ”பூநகரி வைத்தியசாலையிருந்து 400 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் குறித்த மதுபானசாலை அமைந்துள்ளது. இம் மதுபானசாலை காரணமாக அப்பகுதியில் பல்வேறு அநாகரிக செயல்கள் இடம்பெற்று வருகின்றன.
மதுபான பாவனையின் பின்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோர் ஊழியர்களுடன் தேவையற்றதும், அநாவசியமானதுமான வார்த்தைப்பியோகங்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான சம்பவங்களின்போது பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருவதில்லை.
மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 1 மணிவலை மருந்து கட்டுவதற்கான வருகை தருபவர்கள் அதிகமாக உள்ளனர். நோயாளர் காவு வண்டிகள் பழுதடைந்த காலங்களில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றுவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன’ எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.