குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தகவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக்கட்டா இன்று (திங்கட்கிழமை) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து ஏப்ரல் 26 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்
மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக்கட்டா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















