மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில் (சைபர் கிரைம்) மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாடு திரும்புவது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொலைபேசி ஊடாக இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி மியன்மாரில் 56 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மியன்மார் அரசாங்கம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த குழுவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இது தொடர்பான வசதிகளை வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த தாய்லாந்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பாகவும் இந்த உரையாடலில் வெளிவிவகார அமைச்சர்கள் கவனம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.