தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய சபாநாயகர் கடந்தகாலங்களில் நாடாளுமன்றில் எதிர்த்தரப்பினரின் கருத்துக்களுக்கு செவிமடுக்கவில்லை என்பது அவர்களின் பாரிய குற்றச்சாட்டாக காணப்பட்டது.
நாடாளுமன்றில் அவர் நடுநிலையாக செயற்படவில்லை என கூறினார்கள். ஆனால் சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினரே நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்திருக்க வேண்டும்.
ஏனென்றால் கடந்த காலங்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு அதிககால அவகாசம் வழங்கியதுடன் எதிர்த்தரப்பினரின் கோரிக்கைகளை செவிமடுத்த சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவை தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது” என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குறிப்பிட்டார்.