2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை பிரதமர் மோடி. நிர்ணயித்துள்ளார் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்
ஐ.நாவில் இந்தியா சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் இந்தியாவின் சமூக – பொருளாதார, அரசியல், கலாச்சாரத்தை வடிவமைப்பதில் பெண்களை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்