இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில், குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்திய நால்வரை குறுந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஊடகவியலார் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில், குறைந்தபட்ச கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தல் ஈடுபடபோவதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்தது.
திறைசேரியில் அறவிடப்படும் பணத்தில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு, நிதி செயலாளரிடம் கோரிக்கை விடுப்பதாக, குறித்த சங்கத்தின் தலைவர் மகேஷ் லசந்த கம்மன்பில தெரிவித்தார்.
இதன்போது, குறித்த செய்தியாளர் மாநாட்டிற்குள் புகுந்த ஒரு குழுவினரால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து, இதில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.