பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள பாகிஸ்தானில், செலவினங்களை குறைக்கும் நோக்கில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது, குறித்த சிவப்பு கம்பளம் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து பாகிஸ்தான் பிரதமர் ஷேஹ்பஸ் ஷெரீப் (Shehbaz Sharif) உத்தரவிட்டுள்ளார்.
எனினும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது மாத்திரம் , சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படுமென பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நடவடிக்கையால், பணம் சேமிக்கப்படுவதுடன், பொதுமக்களின் நிதி பொறுப்புடன் செலவிடப்படுவதற்கான நோக்கம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.