தாய்வானின் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 அதிகரித்துள்ளதுடன் 730 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்வானில் இன்று (03) அதிகாலை 8.00 மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக தைவான் மத்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையையும் விடுத்தது.
தைவான் தலைநகர் தைபேவை இந்த நிலநடுக்கம் தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, தைவான், ஜப்பான், பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 3 மீற்றர் (9.8 அடி) வரை சுனாமி ஏற்படும் எனவும் ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், 730 பேர் காயமடைந்து உள்ளனர்.
அவர்களில் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன்றனர்.
தாய்வானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இதற்கு முன்னர், 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தொடர்ச்சியாக, 2,400 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.