கச்சத்தீவு விவகாரம் குறித்து மோடியின் கருத்தை, காங்கிரஸிற்கு எதிரான பா.ஜ.க.வின் நிலைப்பாடாக மட்டும் தான் கருதிவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், மோடியின் இக் கருத்து இந்தியாவின் தேசிய பாதுகாப்போடு தொடர்புடைய ஒரு விடயமாக மாறக்கூடும் என சுட்டிக்காட்டினார்.
மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக வரவுள்ள நரேந்திர மோடி, 50 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த, கச்சத்தீவு விவகாரம் குறித்து எதற்காக தற்போது பேச வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கச்சத்தீவு முரண்பாட்டுக்குரிய ஒரு விடயமாக மாறலாம் என தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் சீனாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சீனாவுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் அதே சமயத்தில், இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதைபோன்று காண்பித்து கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆகவே, கச்சத்தீவை வைத்து இலங்கையுடன் முரண்பாட்டை தோற்றுவித்து சில நடவடிக்கைகளை எடுக்கவே இந்தியா முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.