வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக எழுந்திருக்கும் குழப்பங்கள், தொடர்பாக தீவிர கரிசனைகளைக் கொண்டுள்ளதாக ஜக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்திருக்கும் குழப்பங்கள் போன்றவை, சமூக ஒருமைப்பாடு தொடர்பாக தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரென்ச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நிதிநெருக்கடியைக் காரணங்காட்டி பிற்போடப்பட்டமை ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 2024ஆம் ஆண்டு நிலைபேறான அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரி வருமானத்தை அதிகரித்தல், சமூகப்பாதுகாப்பு செயற்றிட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் – கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்றிறன்மிக்க மறுசீரமைப்புக்களிலேயே தங்கியிருப்பதாக ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரென்ச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்னணியில் இவை அரசியல் களத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இழைணயவழி பாதுகாப்பு சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலம் என்பவற்றுக்கு கடும் எதிர்ப்பு வெளியாகிமை தொடர்பாக அதீத கருசனை கொண்டுள்ளதாக ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மேலும் தெரிவித்தார்.