சர்வதேச குழு ஒன்று உலகளவில் இணையதள குற்றச்சாட்டுகள் அதிக அளவில் நடைபெறும் நாடு எது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. சுயளெழஅறயசந, கிரெடிட் கார்ட் திருட்டு மற்றும் மோசடி ஆகியவற்றை உள்ளடக்கி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஆய்வில் இந்தியா 10வது இடத்தை பிடித்துள்ளது.
இதில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது. உக்ரைன் 2-வது இடத்தையும், சீனா 3-வது இடத்தையும், அமெரிக்கா 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. நைஜீரியா 5-வது இடத்தையும், ருமேனியா 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.
வடகொரியா 7-து இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 8-வது இடத்தையும், பிரேசில் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா 10-வது இடத்தை பிடித்துள்ளது.
ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப சைபர்கிரைமின் மையமாக விளங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளதோடு, நைஜீரியாவை சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப சைபர்கிரைமில் குறைந்த அளவில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.