உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரை மாதத் திருவிழா, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் இன்று ஆரம்பமானது.
12 நாள்கள் நடைபெறும் திருவிழாவின்போது தினமும் காலை, மாலை இருவேளையும் நான்கு மாசி வீதிகளிலும் சுவாமி – அம்மன் வீதி உலா நடைபெறும்.
முக்கிய நிகழ்வுகளான, மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் திகதியும், 22 ஆம் திகதி தேரோட்டமும், 23 ஆம் திகதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.