தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்க்கட்சிகள் கூட நம்புவதாகவும், அதனாலேயே பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்களில் பாஜக தனது பெரும்பான்மையைத் பயன்படுத்தி நாட்டை வலுப்படுத்தியதாகவும், ஆனால் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை தன்னுடைய குடும்பத்தைப் பலப்படுத்தவே பயன்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் கூட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
NDA கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்க்கட்சிகள் கூட நம்புகின்றன. அதனால்தான் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி வருவதாகவும் பிரதமர் நரேந்தி மோலடி தெரிவித்துள்ளார்.