முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது
இந்த நிலையில் முழுநாடும் ஒன்றாக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் ஒருவருட பூர்த்தியினை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன் ஒரு அங்கமாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மக்களை விழிப்புணர்வுட்டும் வகையில் கொழும்பில் இன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்திவரை இந்த பேரணி இடம்பெற்றது
பொலிஸார் மற்றும் முப்படையினரின் விசேட அணிவகுப்பும் இடம்பெற்றது
நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பிரதியமைச்சர் சுனில் வட்டகல பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

















