களுத்துறை மாவட்டத்தின் தெற்கு ரயில்வே மார்த்தக்கத்தில் ரயில் ஒன்று இன்று காலை தடம்புரண்டதில் புத்தாண்டிற்காக பயணித்திருந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
தெற்கு களுத்துறையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ள காரணத்தால் கடலோர ரயில் மார்க்கத்தின், போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு இன்று காலை அறிவித்திருந்தது.
மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 என்ற புகையிரதமே இவ்வாறு இன்று காலை தடம் புரண்டிருந்தது.
இரண்டு ரயில் தண்டவாளங்கள் இணைக்கும் இடத்தில் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெலியஅத்தவிலிருந்து மருதானை மற்றும் பெலியஅத்த – மருதானை வரை செல்லும் இரண்டு புகையிரதப் பாதைகளும் முற்றாக இன்று காலை தடைப்பட்டிருந்தது.