ஒவ்வொரு இருண்ட யுகங்கள் ஏற்படும்போது ஒரு வெள்ளிக்கோட்டை பார்பது போன்று தற்போதுள்ள இருண்ட யுகத்தினையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு அனைவரும் அணிதிரளவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை முன்னைய வாழ்க்கைத்தரத்துக்கு கொண்டு செல்வது பாரிய சவாலாக உள்ளதாகவும் ஆனால் அந்தச் சவாலை 220 இலட்சம் மக்களும் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம் இதனை இலகுவாக எதிர்கொள்ளமுடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மாபெரும் கலாசார நிகழ்வாக அறியப்படும் இந்நாளில், அனைவரும் ஒரே சுப நேரத்தில் இருந்து ஒரே கடமையில் ஈடுபடும் இந்த சம்பிரதாயத்தின் காரணமாக சிங்கள, தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த வருடம் மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் நாட்டில் உருவாகும் என்பதும், மீண்டும் தாய்நாட்டுக்கு சுபீட்சம் வரும் என்பதும் தனது நம்பிக்கையாகும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.