15 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிப்பதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தச் சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
இதன்மூலம் 2009 ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குற்றமாகக் கருதப்படுகின்றது.
எதிர்காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் அற்ற சிறந்த தலைமுறையை உருவாக்கும் நோக்கில் பிரதமர் ரிஷி சுனக் இந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளார்.
எனினும், முன்னாள் பிரதமர்களான லிஸ் ட்ரஸ் மற்றும் போரிஸ் ஜோன்சன் ஆகியோர், இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக, பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.