இந்திய மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் பாடசாலை குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்று குழந்தைகளை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது படகில் 15 பேர் பயணித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
















