அரசாங்கம் மக்களுக்கு எவ்வாறான நிவாரணங்களை வழங்கினாலும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தலில் எமக்கு கொள்கை திட்டங்களே அவசியமாகின்றன. 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வாக்குகளை இலக்கு வைத்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
ஆனால் இறுதியில் தோல்வியே கிடைத்தது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. எனவே, இந்த அரசாங்கங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
அரசாங்கம் மக்களுக்கு அரிசியை வழங்கினாலும் அல்லது வேறு நிவாரணங்களை வழங்கினாலும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.