கொடைக்கானல் மேல்மலை கிராமங்களிலுள்ள காட்டு பகுதிகள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகள் என்பன 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.
இதனால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல இன்றும் நாளையும் தடை விதிப்பதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, வனத்துறை, தீயணைப்புத் துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதனால், தற்காலிகமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 6500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஆத்துரை- பெரணம்பாக்கம் காப்புக்காடு தீப்பற்றி எரிந்துள்ளது.
தீயில் சில அரிய வகை உயிரினங்கள் மற்றும் மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மது அருந்துவதற்காக காட்டுப்பகுதிக்குள் நுழைந்தவர்கள் தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.