வடமேற்கு பாகிஸ்தானில், பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
கில்ஜிட் பால்டிஸ்டான் (Gilgit-Baltistan) மாகாணத்தில், டியாமெர் (Diamer)மாவட்டத்திலுள்ள காரகோரம் அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்றே இவ்வாறு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ராவல்பின்டியிலிருந்து (Rawalpindi) ஹ்ன்சா (Hunza) நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பஸ்ஸில் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை சரியாக வெளிவரவில்லை.
எனினும், இதுவரை 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 15 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிலாஸ் (Chilas)வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புக்களின் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.