பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
வேலை நிறுத்தம் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வார இறுதிப் பாடநெறிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
15 சதவீத சம்பள வெட்டு மற்றும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகன்றனர்.
எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழில் நடவடிக்கை மேலும் கடுமையாக்கப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்தார்.
கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.