முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகியுள்ள அந்தப் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக முஜிபுர் ரஹ்மான் இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இதனையடுத்து குறித்த வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், தனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது எனவும், எதிர்காலத்தில் தான் நிச்சயம் அரசியலுக்கு வருவதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.