பிரித்தானியாவின் நாடுகடத்தம் திட்டத்தால் அநேகமான இந்தியர்கள் ஆபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில், சுமார் 2,500 இந்தியர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் சிலருக்கு, 60 நாட்களுக்குள் முறையான உரிமம் பெற்ற ஒரு வேலை வழங்குபவரிடம் வேலைக்கு சேருமாறும், இல்லையென்றால் நாடு கடத்தப்படுவீர்கள் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் அங்கு அனைவரும் ஏற்ற தொழில் இல்லை என்பது பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
இவ்வாறு தொழிலுக்காக சென்ற ஒவ்வொரு இந்தியர்களும், இந்திய ரூபா மதிப்பில் சுமார் 12 முதல் 15 இலட்சம் ரூபாய் வரை ஏஜண்டுகளுக்கு செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து பிரித்தானியா சென்ற பலர், தாம் வேலைக்காக விண்ணப்பித்த ஒரு நிறுவனமே பிரித்தானியாவில் இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பிய ஏஜண்டுகளை தொடர்புகொண்டால், ‘உங்களை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாகக் கூறினோம். நீங்கள் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறீர்கள். அத்துடன் எங்கள் வேலை முடிந்தது“ என தெரிவிப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இவ் விடயம் தொடர்பாக, பிரித்தானிய உள்துறைச் செயலர் ஜேம்ஸ் கிளெவர்லியை சந்திக்க, சம்பந்தப்பட்டவர்கள், தொடர்புடைய இந்திய அமைப்பொன்றிடம் அனுமதி கோரியுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.