தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பதுளை மாவட்டம் எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று மழை காரணமாக மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை தற்காலிகமாக குறித்த பாதை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது
எவ்வாறாயினும், இன்றும் மழை பெய்தால் எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட சாலையை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும். என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.