பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் முடியும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு பிரித்தானியாவில் பல முக்கிய விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், பிரித்தானியாவல் இருந்து எப்போது நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் விடயமாக அந்நாட்டு பிரதமர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளில் ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழப்பாரானால், ருவாண்டா திட்டம் செயல்படாமல் போகவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.