நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 150 மில்லிமீற்றர் வரையிலான அதி பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். என குறிப்பிடப்பட்டுள்ளது.