இளைஞர் ஒருவர் தான் உருவாக்கிய செயலியை 416 கோடி இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிஷான், என்ற26 வயதான இளைஞரே தனது படைப்பான Texts.com என அழைக்கப்படும் மெசேஜ் செயலியை உருவாக்கி வேர்ட்பிரஸின் (Word Press) தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கிடம் ரூ.416 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
குறித்த செயலி மூலம் எந்தவித தடங்கலும் இல்லாமல் வட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் , டெலிகிராம் என அனைத்து பிரபல செயலிகளையும் ஒருங்கிணைத்து ஒரே இண்டர்ஃபேஸின் கீழ் கொண்டுவர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவை ஏற்படின் எதிர்காலத்தில் கூடுதலாக அப்கிரேடுகள் செய்யும் திட்டமும் இந்த செயலியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷான் உருவாக்கிய இந்த புதுமையான செயலி, ஆட்டோமெட்டிக் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் மேட் முலன்வெக்கின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையிலேயே. கிஷான் தனது செயலியை சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.416 கோடி) விற்பனை செய்துள்ளார்.
10 ஆம் வகுப்புடன் தனது கல்வியை இடை நிறுத்திய கிஷான் இணையத்தின் மூலம் கிடைத்த அறிவைக் கொண்டே குறித்த செயலியை கண்டுபிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.