எதிர்காலம் தொடர்பாக மக்கள் இன்று சவாலை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இலங்கை ஒரு பௌத்த நாடு. எதிர்காலம் தொடர்பாக மக்கள் இன்று சவாலை எதிர்கொண்டுள்ளனர்.
தொழினுட்ப அறிவுடன் முன்னேறக்கூடிய எதிர்கால சந்ததியினரான மாணவர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார அரசியல் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” இவ்வாறு மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.