”ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன எத்தைகைய விவாதங்களை முன்னெடுத்தாலும் இருதரப்பினரும் தோல்வியை தழுவநேரிடும்” என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிமாநாடு எதிர்வரும் 26 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் உள்ளுராட்சிமன்ற தேர்தல் என அனைத்தையும் எதிர்கொள்ளதயாராகவே உள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிளவடையச் செய்வதற்கு பலர் முயற்சித்திருந்த போதிலும் வலுவான கட்சியாக வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன மக்கள் மத்தியில் தோல்வியடைந்த கட்சிகளாகும். இரு கட்சிகளின் தலைவர்கள் எவ்வாறான விவாதங்களை முன்னெடுத்தாலும் அவர்கள் இருவருமே தோல்வியை தழுவநேரிடும். ஏனெனில் இருவரிடமும் பொருளாதார கொள்கை திட்டம் கிடையாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.