நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, ஆட்சிக்கு வந்தநாள் முதல் பொதுஜன பெரமுனவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்
காலியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலை எதிர்கொள்ளதயாராகவே உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை நாம் கிராமமட்டத்திலிருந்து மிகவும் பலமிக்கதாக ஆரம்பித்துள்ளோம்.
எதிர்வரும் சில நாட்களுக்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி ஸ்தாபிக்கப்படும். எம்முடன் இணைவதற்கு பலர் அரசியல் கட்சிகள் முன்வந்துள்ளன.எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயார்.
ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியேற்ற சந்தர்ப்பத்தில் அவர் புதிய கொள்கை திட்டங்களுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அவர் பொதுஜன பெரமுனவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுகின்றார்” இவ்வாறு பண்டாரிகொட தெரிவித்துள்ளார்