ரஃபா மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.
காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த தாக்குதல்களை இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும் என தென்னாபிரிக்கா ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
எனினும் தற்போது பாலஸ்தீன மக்கள் அதிகமாக வசித்து வரும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருவதனால் அதிக அளவில் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையிலேயே ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உடனடியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.