இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் மோசமான விடயம் என இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்பதுடன், ரபாவில் போர் இலக்குகள் தொடரும் என இஸ்ரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு ஒழுக்க ரீதியில் அருவருப்பானது என்பதுடன், ஏற்றுக்கொள்ளத்தக்கதான விடயமும் அல்ல எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனவே காசா பகுதி முழுவதிலும் இருந்து ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தமது இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.