தென்மேல்பருவப்பெயர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய மலையத்தின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல் தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் காற்றின்வேகமானது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.