மியன்மார் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தை நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, ஜே.சி. அலவத்துவல மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர் இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 01.10 அளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானமூடாக தாய்லாந்தின் பாங்கொக் நோக்கி சென்றுள்ளனர்.
மியன்மார் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பாக மியன்மார் மற்றும் ரஷ்யாவில் 5 நாட்கள் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் தாய்லாந்து மற்றும் மியான்மர் மகாநாயக்கர்கள் மற்றும் ரஷ்ய தூதரக அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.