அமெரிக்காவை தாக்கிய புயலால் சிறுவர்கள் உட்பட குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
மேலும், இந்த புயல் தாக்கத்தினால், மின்சார சேவையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சுமார் 5 இலட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி இந்த புயலினால் டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்கள் பாரிய பாதிப்புக்குள்ளானதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அங்குள்ள ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்துள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைதொடர்ந்து விரைந்து செயற்பட்ட மீட்பு படையினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.