நைஜீரியாவின் நைஜர் மாகாணம் முன்யா நகரிலுள்ள கிராமத்தில் பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து 150 பேரை கடத்தி சென்றுள்ளனர்
மேலும், கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்க முயன்றபோது, தடுக்க வந்த கிராம மக்கள் 7 பேரையும் சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 200 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள்களில் கிராமத்திற்குள் புகுந்து இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்தையடுத்து, விரைந்து செயற்பட்ட பாதுகாப்புப்படையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளடன், கடத்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.