நாட்டில் சந்தை வட்டி வீதங்களை குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அதன் நன்மைகளை சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் வழங்கும் என எதிர்பார்ப்பாதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, புதிதாக வழங்கப்படும் கடனுக்கான வட்டி வீதம் குறைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது வழங்கப்பட்ட கடன்களில் செய்ய வேண்டிய மாற்றம் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, நாட்டில் சந்தை வட்டி வீதங்களை குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய, அதன் நன்மைகளை சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் வழங்கும் என எதிர்பார்ப்பாதாகவும் அவர் கூறினார்.
மேலும், புதிய கடன்கள் அதிக வட்டிக்கு வழங்கப்படுவதையும் நாம் அவதானித்து வருவதாகவும் ஆனால் அது நடக்கக்கூடாது என்பதால் இந்த மாற்றம் வெகுவிரைவில் இடம்பெற வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை தற்போதைய நிலைகளில் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படீ, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதமாக பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.