டுபாயில் கைது செய்யப்பட்ட மிதிகம ருவான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர் தொடர் இரகசிய பொலிஸ் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
பாதாள உலகத் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவன் டுபாயில் இருந்து இன்று அதிகாலை காலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் நரேஹன் பிடியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழு ஒன்று மிதிகம ருவனை டுபாயில் இருந்து அழைத்து வந்துள்ளனர்.
அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ‘ஹரக் கட்டா’ அல்லது நதுன் சிந்தகவை விடுவிக்க இவர் திட்டமிட்டிருந்தாக சந்தேகிக்கப்படுகிறது. டுபாயிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலில் சந்தேகநபர், அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே சந்தேகநபர் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தப்பிச் செல்ல ஹரக் கட்ட மேற்கொண்ட முயற்சி மிதிகம ருவானினால் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிதிகம ருவன் தொடர்பான மேலதிக விசாரணைகள், குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.