விருதுநகர் மக்களவைத் தொகுதியில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணத் ஆரம்பத்துள்ள நிலையில், 8.30 க்கு மின்னணு வாக்குப் பதிவுகள் எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும், காலை 10.30 மணி வரை முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாமையை கண்டித்தும் ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் சென்று செய்தி சேகரிக்க அனுமதியளிக்கக் கோரியும், பத்திரிகையாளர்களைத் தடுக்கும் பொலிஸாரைக் கண்டித்தும் 25 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களிடம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொலிஸ் பாதுகாப்புடன் அணியணியாக பத்திரிகையாளர்கள் சென்றுவர அனுமதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பத்திரிகையாளர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.