தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் (Mangaf) மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 6 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குவைத் செய்திகள் தெரிவித்துள்ளன.
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் (Mangaf) நகரில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்திலேயே திடீரென இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது குறித்த கட்டடத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தைத் தொடர்ந்து குடியிருப்பில் இருந்து அதிகமானோர் மீட்கப்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக தீயிலிருந்து வெளியேறிய புகையை சுவாசித்தமையால் பலர் உயிரிழந்துள்ளார்கள் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதோடு 40 இற்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன்இ தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் குவைத் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்ககது.