”உரக் கொள்வனவு விவகாரத்தினாலேயே கோட்டாபய பதவி விலக நேரிட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் தேர்தலை இலக்கு வைத்து அவர்களது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் நாம் எமது தரப்பு வேட்பாளரை முன்னிலைப்படுத்துவோம். கோட்டாபய ராஜபக்சிவின் ஆட்சியில் பல நல்ல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் உரக்கொள்வனவு விவகாரத்திலேயே கோட்டாபய ராஜபக்ச நெருக்கடியை எதிர்கொண்டார். அதனாலேயே அவர் பதவியில் இருந்தும் விலக வேண்டி ஏற்பட்டது.
கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கான நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம்.
யாருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாம் இன்றும் தீர்மானிக்கவில்லை.
வெற்றிபெறக்கூடிய ஒருவரையே நாம் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவோம்” இவ்வாறு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.