நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகி ஜீலை மூன்றாம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் திகதி நடைபெறும் என மக்களவை செயலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டது.
சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறிவைத்துள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கின்றன.
சபாநாயகர் பதவிக்கான போட்டியில் வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க.வும் முடிவு செய்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி பொது வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டி வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.