விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது எனவும், இதனாலேயே தான் அங்கு போட்டியிடவில்லை எனவும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்த அவர், 2026 இல் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமையக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலின் போது, 36 இடங்களில் மக்களை பட்டியில் அடைத்து வைத்ததாகவும், அங்கு, ஜனநாயக படுகொலை நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மாநில அரசுக்கு, தேர்தல் ஆணையம், பொலிஸ், அரசு அதிகாரிகள் துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்காது என கருதியதாலேயே, அதிமுக அங்கு போட்டியிடவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
அங்கு பணத்தை வாரி இறைப்பார்கள் எனவும், பரிசு பொருட்கள் அள்ளி கொடுப்பார்கள் எனவும், அமைச்சர்கள் தொகுதிவாரிய பிரித்து பண மழையை பொழிவார்கள் என குறிப்பிட்ட அவர், சுதந்திரமாக தேர்தல் நடக்காது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் மக்களவைத் தேர்தலில், விக்கிரவாண்டியில் அதிமுக 6 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே பெற்றதமாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, மக்களவைத் தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு எனவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, மக்கள் இரண்டையும் பிரித்து பார்த்து சிந்தித்து வாக்களிப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.